யாம் உண்பேம்

நாஞ்சில் நாடன்

நக்கீரன் : ஓர் எழுத்தாளரிடம் கேட்க கூடாத கேள்விதான்… வாசகனை அசைத்துப்போடும் உங்கள் படைப்புகளிலேயே உங்களை அசைத்தப் படைப்பு எது…?
 நாஞ்சில் நாடன் : நான் முன்னரே சொன்னது போல்… என் தேடல்களில் கிடைக்கும் மனிதர்கள் கதை மாந்தர்களாக வலம் வருவது போல், இங்குள்ள கேவலமான அரசியலும் என் கதைகளில் வலியோடு இருக்கிறது. மகாரஷ்டிராவில் விவசாயிகள் பசி பட்டினியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், அவர்கள் வயிற்று வலியால் செத்துப்போனார்கள் என சத்தியம் செய்தது இங்குள்ள அரசியல்.
மனம் வெதும்பிய நான் மகாராஷ்டிராவில் விவசாயிகள் ரயில் பெட்டியில் அமர்ந்து சில ரொட்டித் துண்டுகளையும் உருளைக் கிழங்கையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சமயம் ஒரு விவசாயி என் இருக்கைக்கு வருகிறார். ஒரு பாலித்தீன் பையில் சில துணிகளும், ஒரு வாட்டர் கேனில் பாதிக் குடிக்கப்பட்ட தண்ணீரையும் கொண்டு வந்தவரின் முகத்தில் அப்படியொரு சோகமும், வலியும் விரவிக்கிடந்தன.
மெல்ல… தயக்கத்தோடு என் அருகே வந்து என்னிடம் இருக்கும் ரொட்டித் துண்டுகளை கவனிக்கும் அவர், ஹமீ கானா… என்ற போது, நான் அழுதே விட்டேன். அதற்கு அர்த்தம் ‘யாம் உண்போம்’என்பது. எனக்கு கொடுங்கள் என்றால் பிச்சைக் கேட்பது போல் ஆகிவிடும் என்பதால் அந்த விவசாயி ‘ஹமீ கானா’ என்று கேட்ட அந்தத் தருணம், அவரின் விரக்தியான கண்கள்… மகாராஷ்டிரா விவசாயிகளின் கொடும் பசியை மறைக்கச் செய்யும் அரசியலை கிழித்தெறிந்தன. அந்த நிஜக் கதைதான் இந்தச் “சூடிய பூ சூடற்க” சிறுகதைத் தொகுப்பில் உள்ள ‘யாம் உண்போம்’ கதை.

 

தொடர்ந்து படிக்க: யாம் உண்போம்(தொடர்ச்சி)

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to யாம் உண்பேம்

  1. தி. பரமேசுவரி சொல்கிறார்:

    சிவனின் ஊழித் தாண்டவமென அல்லவைகளை அழிக்கும் அறச் சீற்றம் நாஞ்சில் நாடனின் எழுத்துகளில் தெறிக்கிறது. பரந்து கெடுக உலகியற்றியான் எனும் வள்ளுவன் குரல் ஒலிக்கிறது. ஜகத்தினை அழிக்கக் கிளம்பிய பாரதியின் ஆவேசம் இங்கே காணக் கிடைக்கிறது.

  2. J.Subramonian சொல்கிறார்:

    கருவின் உணவு குழாய்க்கு உள்ளே போய் பிடுங்கி தின்கிற இந்திய தேச அரசியல்வாதிகளுக்கு இந்த கோபமுனி எழுத்துக்கள் எட்டுமா

  3. M.Murali சொல்கிறார்:

    நான் இந்த கதை படித்துள்ளேன். மனதை தொடும் (அ) சுடும்
    தலைப்பு சொல்வது ‘யாம் உண்பேம்’ –
    வலை இணைப்பு சொல்வது ‘யாம் உண்போம்’

    முடிந்தால் சரி செய்யலாம்
    M.Murali

  4. பிங்குபாக்: உண்பேம் » ஜெயமோகன்

  5. பிங்குபாக்: நாஞ்சில் நாடன் சிறுகதைகள் – சிலிகான் ஷெல்ஃப்

  6. பிங்குபாக்: நாஞ்சில் நாடனுடன் சில நாட்கள் – Visu

  7. பிங்குபாக்: நாஞ்சில்: சூடிய பூ சூடற்க – சிலிகான் ஷெல்ஃப்

பின்னூட்டமொன்றை இடுக